பக்கம்:சிவ வழிபாடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lord! Oh my Lord", I called several times. Oh Lord with sacred saintly form! I entreated You with love and called You. "From the earth surrounded by sea with waves, please do come. This is the way to enter Kailas! Look"- so tell me and bestow grace. (32) உலகத்து மக்களுக்கு மூன்று ஆசைகள் உண்டு; பெண் ஆசை மண் ஆசை, பொன் ஆசை, இவற்றுள் பெண் ஆசை பொல்லாதது; பெருந் தீமைகளை விளைவிப்பது பெண் ஆசையால் இராவணன் மடிந்த கதை உலகு அறியும். நற்காமம் என்பது வேறு தீய காமம் என்பது வேறு. தீய காமம்தான் கண்டகண்ட பெண்களிடத்து உறவு கொள்ளத்துாண்டும். அத்தீய உறவினால் ஏற்படும் கொடுமைகள்தான் எத்தனை பொருட்கேடு, மானக்கேடு, அச்சம், பகை இன்னும் எத்தனேயோ பல நேரிடுமே. இம்மட்டோ உடம்பும் கெடும்; நோயும் உண்டாகும்; தீராப்பழியும் வருமே. ஆகவே அத்தகைய பொருட் பெண்டிர் முயக்கம் நீங்கி, இறைவனிடத்தும், மற்ற உயிர்கள் இடத்தும் ஆசையும் அன்பும் காட்டினால் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும். உலகீர் இதனை அறிவிராகுக. திருச்சிற்றம்பலம் உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன் Utraarai yaan vēnndēn Ur vērındēn pērvēnndēn கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் Katrārai yaan vēnndēn karrpanavum ini amaiyum குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் Kutrala—ththu arnarnthu urraiушm kuththaa un குரைகழற்கே kuraikazharrkē கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே. Katraavin manam põlak kasinduruga vēnnduvanē. திருச்சிற்றம்பலம் 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/79&oldid=833670" இலிருந்து மீள்விக்கப்பட்டது