பக்கம்:சிவ வழிபாடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை வந்து அடைந்தவர்களை விரும்பமாட்டேன். ஊரில் உள்ள மற்றவர்களையும் விரும்பமாட்டேன். புகழையும் விரும்பமாட்டேன்; படித்தவர்களையும் யான் விரும்ப மாட்டேன். இது காறும் படித்த படிப்பும் போதும். திருக்குற்றாலம் எனும் தலத்தில் விரும்பி வசிக்கும்படியான கூத்தாடும் பெருமானே! ஒலிசெய்யும் குழல்களை உடைய உன் திருவடிகள் இடத்துக் கன்றைக் கண்டு உருகும் பசுவைப்போல், நான் கசிந்து உருக விரும்புகிறேன். | like not kith and kin; nor the inhabitants of my town I aspire not for fame; I like not men of letters; What I have learnt is enough indeed! Oh Dancer having abode at Tirukkutraalam! | long to melt with love towards Thee just like the milch cow towards its calf. (33) மக்கள் உடம்பு எலும்பு தோல் இறைச்சி நரம்பு இரத்தம் முதலிய தாதுக்களால் ஆனது வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுவது; தாகம் பெ ஆகியவற்றை உடையது. இவற்றுள் எது மிகினும் குறையினும் நோய்வரும். நோய் வராதவாறு உடம்பினைப் பேணுதல் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயுற்றார் தமக்கும் சுகம் இல்லை. பிறருக்கும் தொல்லை தருவர். அவர்கள் வீட்டுக்குத் தொல்லை தருபவராகவே கருதப்படுவர். அவர்கள் தம் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமுடியாதவர் ஆகின்றனர். இதனால் நாட்டுக்கும் பயன் அற்றவர் ஆகிறார்கள். ஆகவே நோய் அணுகாத உடம்பினராக இருக்க நற்பண்புகளைப் பேணிப் பழகவேண்டும். திருச்சிற்றம்பலம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே Ammaiyē арраа oppilaa manniyē அன்டரினில் விளைந்த ஆரமுதே arbini! villaindha aaramudhe 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/80&oldid=833674" இலிருந்து மீள்விக்கப்பட்டது