பக்கம்:சிவ வழிபாடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறை புகலியூரில் அன்று வருவோனே! Urrafi Pugaliyuril andrru varuvonē! பரவை மனைமீதில் அன்று ஒரு பொழுது துாது சென்ற Paravai manaimeedhill andrru oru pozhudhu thūthu sendra பரமன் அருளால் வளர்ந்த குமரேசா Pararnan arusaal vallarndha Kumarēsaa! பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று pagai asurar sēnai kondrru amarar sirrai meela vendru பழனிமலை மீதில் நின்ற பெருமாளே! Pazhanimalai mēdhil nindrra perumaallē! கருவில் விழுந்து, உருவெடுத்துப் பிறந்து, ஒவ்வொரு வயதாக வளர்ந்தேன்; கலைகள் பலவற்றையும் கற்று அறிந்தேன்; கரிய கூந்தலையுடைய பெண்களின் (காதல் மயக்கத்தால் அவர்களுடைய) கால் சுவடுகளை என் மார்பில் புதைத்துக் கொண்டேன். கவலைகள் அதிகம் ஆயின. அதனால் வருந்தினேன்; மிகவும் வாடினேன். அரகர, சிவாய என்று நாள்தோறும் நினைக்கவில்லை; ஆறு வகையான சமயங்கள் கூறும் கோட்பாடுகளை ஒன்றும் அறிந்து கொள்ளவில்லை. உணவு இடுபவர்கள் வீட்டின் வாசலில் நாள்தோறும் . நிற்பேன் இங்ங்னம் நான் வெட்கம் இல்லாமல் அழியலாமோ? படம் உடைய பாம்பின் மேல் படுத்து இருப்பவர் பெரிய பெருமாள் ஆகிய திருவரங்கர் உலகத்தை அளந்தவர் ஆகிய திருமாலின் மருமகனே! தாய்தந்தை ஆகிய இருவர் மரபுகளிலும் விளக்கைப் போன்றவனே! உயர்ந்தவனே! 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/90&oldid=833696" இலிருந்து மீள்விக்கப்பட்டது