பக்கம்:சீதா கல்யாணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சீதா கல்யாணம்


இராமாயணக் கதை

பால காண்டம்:

பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால், வட இந்தியாவிலே கோசல நாட்டைத் தசரதன் என்னும் சக்கரவர்த்தி ஆண்டு வந்தான். அவனுடைய ராஜதானிப்பட்டணம் அயோத்தி. அவனுக்கு மனைவிமார் மூன்று பேர். அவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை எனப்படுவார்கள். வெகுகாலம் வரை தசரதன் புத்திரப்பேறு இல்லாதிருந்தான்.அவன் புத்திர காமேஷ்டி யாகம் செய்ததின் பலனாக, கோசலையிடத்தில் இராமனும், கைகேயினிடத்தில் பரதனும், சுமித்திரையிடத்தில் இலக்குமணனும் சத்ருக்கனனும் பிறந்தார்கள். குழந்தைகள் நால்வரும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாகவே வளர்ந்து வந்தனர். தக்க பிராயம் வந்ததும், அவர்கள் வில்வித்தை, வாள் பயிற்சி, யானையேற்றம், குதிரை யேற்றம் முதலியன பயின்றார்கள். இளங்குமரர் நால்வரிலும் இராமனே குணத்திலும் பராக்கிரமத்திலும் சிறந்து விளங்கினான். - -

விசுவாமித்திரர் ஒரு மகரிஷி. இவர் ஒரு பெரிய யாகம் செய்தார். இவருடைய யாகத்தை அரக்கர்கள் கெடுத்து வந்தனர். ஆகையால், இவர் தசரதனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/14&oldid=1367733" இலிருந்து மீள்விக்கப்பட்டது