பக்கம்:சீதா கல்யாணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 13

சென்று, அந்த அரக்கர்களை அழிக்க இராமனைத் தம்முடன் காட்டிற்கு அனுப்பும்படி கேட்டார். இராமனை அனுப்பத் தசரதன் மிகவும் கஷ்டப்பட்டான்.ஆயினும் தனது குலகுருவாகிய வசிஷ்டர் சொன்ன தின் பேரில் அவன் இராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தான். இராமனை விட்டு என்றும் பிரியாத இலக்கு மணனும் கூடச் சென்றான்.இராமன், விசுவாமித்திரரின் யாகத்தைக் கெடுக்க வந்த தாடகை, சுவாகு முதலியோரைக் கொன்று, அந்த யாகத்தை நிறைவேற்றி வைத்தான். அப்பால் விசுவாமித்திரர் இராம, லக்குமணர்களை அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் சென்றார். போகிற வழியில் கல்லாயிருந்த அகலிகை, இராமனது பாதம் பட்டதால் சாப விமோசனம் அடைந்து, கல்லுருவம் நீங்கித் தன் சுய உருவம் அடைந்தாள். மிதிலையில் இருந்து அரசாண்டு வந்த சனகனிடம் மிகவும் பலமுடையதான வில் ஒன்றிருந்தது. அந்தவில்லை வளைத்து நாண் ஏற்று பவருக்கே தன் மகள் சீதையை மணம் செய்து கொடுப்பதாய் அறிவித்திருந்தான் சனகன். பல அரசர்கள் வந்து அந்த வில்லை வளைக்க முயன்று முடிவில் தோல்வியடைந்தார்கள்; அது ஒடிந்தது. சனகன் சந்தோஷ மடைந்து சீதையை இராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். சீதையுடன் இராமன் அயோத்திக்குத் திரும்பினான். வருகிற வழியில் பரசுராமனது கர்வத்தையும் அடக்கி அவனையும் பங்கப்படுத்தினான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/15&oldid=1367750" இலிருந்து மீள்விக்கப்பட்டது