பக்கம்:சீதா கல்யாணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 சீதா கல்யாணம்

கிஷ்கிந்தா காண்டம்:

சீதையைத் தேடிப் புறப்பட்ட இராமனும் இலக்கும ணனும், கிஷ்கிந்தையில் அனுமான், சுக்ரீவன் முதலிய வாணர வீரர்களைச் சந்திக்கிறார்கள். சுக்ரீவனுக்காக, அவனது அண்ணனான வாலியை இராமன் கொன்று, அவனது நட்பைப் பெறுகிறான். அனுமனாதிவானரர் நான்கு திசைகளிலும் சென்று சீதையைத் தேடு கிறார்கள். - சுந்தர காண்டம்:

அனுமன் கடந்த கடந்து இலங்கை சென்று, அசோக வனத்திடையே சிறையிருந்த சீதையைக் கண்டு, தான் இராமதூதன் என்றும், அவளுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்றும் சொல்லுகிறான். பலம் மிகவும் உடைய இந்த அனுமன், இலங்கை நகரிலே அசோக வனத்தை அழித்து, இராவணனது சேனாவீரர் பலரையும் கொன்று, இலங்கை நகரையே தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் திரும்பிவந்து, இராமனிடம் சீதை இலங்கையிலே சிறையிருப்பதைக் கூறுகிறான்.

யுத்த காண்டம்:

இராமனும் இலக்குமணனும், வானர சேனையுடன், இலங்கைக்குச் செல்கிறார்கள்.இராமேஸ்வரத்துக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடலிலே பெரிய அணை ஒன்று கட்டி, அந்த அணை வழி நடந்து, சேனாவீரரும் பிறரும் இலங்கை சேர்கிறார்கள். இலங்கை அரசன் தம்பியான விபீஷணன், தன் அண்ணனை வெறுத்து ஒதுக்கிவிட்டு, இராமனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/18&oldid=1367835" இலிருந்து மீள்விக்கப்பட்டது