பக்கம்:சீதா கல்யாணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 சீதா கல்யாணம்

மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடுதான். இந் நூலைத் தாம் இயற்ற முனைந்ததாகவும் அவர் சொல்லு கிறார்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன், மற்று, இக் காசில் கொற்றத்து இராமன் கதை, அரோ!'

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள் தறையில் கீறிடில், தச்சரும் காய்வரோ? இறையும் ஞானம் இலாத என் புன்கவி முறையில் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

இனி இராம கதை ஆரம்பமாகின்றது. வடஇந்தியா விலே, சரயு நதி தீரத்தில் உள்ள கோசல நாட்டைத் தசரதன் என்ற ஓர் அரசன், அயோத்தி நகரில் இருந்து அரசாண்டு வந்தான். அந்த நாட்டையும், நகரத்தையும், அந்த நாட்டில் ஓடும் சரயு நதியையும் கம்பர் அழகாக வர்ணிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/22&oldid=1367857" இலிருந்து மீள்விக்கப்பட்டது