பக்கம்:சீதா கல்யாணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சரயு நதி

சரயு நதி இமயமலையிலே உற்பத்தியாகி, நாட்டிலுள்ள ஏரி குளம் முதலிய நீர்த்துறைகள் பலவற்றிலும் பரவி, கடைசியில் கடலிற் சென்று கலந்தது. இப்படி இந்நதி பல இடத்தும் பரவிய தன்மை, பல சமயவாதிகள் தம் தெய்வம், எம் தெய்வம் என்றெல்லாம் கூறி வழிபடும் ஒரே பரம்பொருள், பலவாய் வியாபித்தது போல இருந்தது.

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம், எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் தென்னத் தொல்லையில் ஒன்றேயாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி, பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததுஅன்றே.

கோசல நாட்டில் ஓடிய சரயு நதியின் வெள்ளம், தோப்புகள், சண்பகச்சோலைகள், தடாகங்கள், மணற் கேணிகள், கமுக வனங்கள், வயல்கள் ஆகிய எல்லா இடங்களிலும் பரந்து சென்றது, உடம்பில் உயிர் புகுந்து உலாவியது போலவே இருந்தது.

தாது உகு சோலை தோறும்,

சண்பகக் காடு தோறும், போது அவிழ் பொய்கை தோறும், புதுமணத் தடங்கள் தோறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/23&oldid=1367864" இலிருந்து மீள்விக்கப்பட்டது