பக்கம்:சீதா கல்யாணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 25

இத்தகைய பெண்மணிகள் வசிக்கும் நாட்டிலே, குற்றங்கள் செய்வாரும் உண்டா? நாட்டிலே குற்றவாளிகள் இல்லாவிட்டால் அங்கு யமனுக்கு வேலையுண்டா? இப்படி அந்நாட்டு மக்கள் தங்களைச் செம்மைப்படுத்திக் கொண்டிருப்பதால், அவர்களு டைய பண்பட்ட உள்ளத்திலே கோபம் முதலிய துர்க்குணங்கள் தோன்றுவதற்குத்தான் இடமுண்டா? அவர்கள் எப்பொழுதும் நல்ல தரும நெறியிலேயே ஈடுபட்டிருந்ததால், அந்நாடு முன்னேற்றம் அடைந்து கொண்டே வருவதில் ஏதாவது வியப்புண்டா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கம்பர் எவ்வளவு அழகாகப் பதில் சொல்கிறார்!

கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால், சீற்றம் இல்லை தம் சிந்தையின் செவ்வியால்; ஆற்றல் நல்அறம் அல்லது இலாமையால், ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/27&oldid=1367879" இலிருந்து மீள்விக்கப்பட்டது