பக்கம்:சீதா கல்யாணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. தசரதனது அரசியல்

இத்தகைய கோசல நாட்டை ஆண்டு வந்தவன் தசரதன். அவன் சூரிய குலத்தில் உதித்தவன். இந்நாட் டில் வாழும் குடிகளுக்கெல்லாம் தாய் போன்றவன் அவன்.அவர்களுக்கு வேண்டிய நலன்களையெல்லாம் செய்வதில் அவர்கள் இயற்றிய தவமே உருவெடுத்து வந்தவன் அவன் என்று சொல்லும்படியாக இருந்தான். மக்களை யெல்லாம் நன்னெறிகளிலே ஒழுகச் செய்து, அவர்கள் நற்கதியடையும்படி செய்யும் புத்திரன் போலவும் அவன் இருந்தான். குற்றஞ் செய்தவர்களைத் தண்டிப்பதில் நோய் போல்வான்.நுட்பமான பொருள் அறியும் அறிவும், அவனிடம் நிரம்பியிருந்தது. இத்தகைய அரசனது ஆட்சியில் வாழும் குடிகளுக்குத் தான் ஏதாவது குறை இருக்க முடியுமா?

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின், சேய் ஒக்கும், முன் நின்று செல்கதி உய்க்கும் நீரால்; நோய் ஒக்கும் என்னின், மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் இப்படிப்பட்ட தசரதன், மன்னுயிரெல்லாம் தன்னுயிர்போலப் பாதுகாத்தலால் உலகத்திலுள்ள சகல ஜீவராசிகளும் வாழும் ஓர் உடம்புதான் அவன் என்று சொல்லும்படி இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/30&oldid=1367889" இலிருந்து மீள்விக்கப்பட்டது