பக்கம்:சீதா கல்யாணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 29

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால், செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் உயிர் எலாம் உறைவது ஒர் உடம்பும் ஆயினான். (மடங்கல் - சிங்கம்- மொய்ம்பு - பலம்) அவனுக்குப் பகையரசர்களே கிடையாது. அதனால் நாட்டின் மீது படையெடுப்பார் ஒருவரும் இல்லை; போரும் இல்லை. ஆகவே அவன் கவனம் முழுவதும் நாட்டிற்கு வேண்டும் நன்மைகளை நினைந்து நினைந்து செய்வதிலேதான் சென்றது. ஒரு தரித்திரன் தனக்குள்ள ஒரே வயலை எவ்வளவு சாக்கிரதையுடன் பாதுகாப்பானோ, அது போலத் தன் நாடு முழுவதை யும் கவனமாகக் காத்து அரசு செலுத்தி வந்தான்.

'எய்'என எழு பகை எங்கும் இன்மையால் மொய் பாரு தினவுறு முழவுத் தோளினான், வையகம் முழுவதும், வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/31&oldid=1367891" இலிருந்து மீள்விக்கப்பட்டது