பக்கம்:சீதா கல்யாணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. இராமனது அவதாரம்

சக்கரவர்த்தி தசரதன் ஒரு நாள் தனது குலகுரு வாகிய வசிட்டரை வணங்கி, தனக்குப் பின் கோசலை நாட்டை ஆள்வதற்கு ஒரு புத்திரன் இல்லையே என்று வருந்தி, தன் மனக் கவலையை எடுத்து உரைத்தான். வசிட்டரும்,திருமால் அரக்கரை அழிப்பதற்காகத்தான் இராமாவதாரம் எடுப்பதாய்க் கூறியுள்ளதை நினைந்து, தசரதனைப் புத்திரகாமேட்டி யாகம் செய்யும்படி கட்டளையிட்டார். தசரதன் அப்படியே செய்ய, அவன் மனைவியரில் கோசலைக்கு இராமனும், கைகேயிக்குப் பரதனும், சுமித்திரைக்கு இலக்குமணனும் சத்துருக் கனரும் பிறந்தார்கள்.மக்கள் நால்வரும் வளர்ந்து கல்வி பயின்று, யெளவனப் பருவம் அடைந்தார்கள். இவர்களையெல்லாம் கண்ட மாந்தர்கள் மழை கண்டு செழிக்கும் பயிர் போலக் களித்தார்கள். தசரதனும் தனது மக்கட்பேற்றில் மகிழ்ந்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/32&oldid=1367894" இலிருந்து மீள்விக்கப்பட்டது