பக்கம்:சீதா கல்யாணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. இராம, லக்குமணரை விசுவாமித்திரர் அடைக்கலமாகப் பெறுதல்

இப்படித் தசரதன் இனிது வாழ்ந்திருக்கும் போது, ஒரு நாள், அவனுடைய ராஜசபைக்கு ராஜரிஷி விசுவாமித்திரர் வந்து சேர்ந்தார். அவருடைய வரவு தன் முன்னோர் செய்த தவத்தின் பலன்தான் என்றெல் லாம் சொல்லி உபசரித்து அவரை வணங்கினான் தசரதன்.

நிலம் செய் தவம் என்று உணரின், அன்று, நெடியோய்! என் நலம் செய்வினை உண்டு எனினும், அன்று; நகர், நீ யான் வலம் செய்து வணங்க எளிவந்த இது, முந்து என் குலம் செய் தவம் என்று இனிது கூற, முனி கூறும். விசுவாமித்திரரோ, தாம் செய்யும் வேள்வியை அரக்கர்கள் அழித்து இடையூறு செய்வதால், அந்த வேள்வியைக் காக்க இராமனைத் துணைபெறவே வந்திருக்கிறார். ஆதலால் அவரும் தசரதனைப் பலபடியாகப் புகழ்ந்து முகஸ்துதி செய்கிறார்.

‘என் அனைய முனிவரரும் இமையவரும்

இடையூறு ஒன்று உடையரானால்,

பல் நகமும் நகு வெள்ளிப் பணி வரையும்,

பாற்கடலும், பதும் பீடத்து

அந்நகரும், கற்பக நாட்டு அணி நகரும், மணிமாட அயோத்தி என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/33&oldid=1367896" இலிருந்து மீள்விக்கப்பட்டது