பக்கம்:சீதா கல்யாணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 சீதா கல்யாணம்

பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ,

இகல் கடந்த புலவு வேலோய்?

'இன் தளிர்க் கற்பக நறுந்தேன் இடை துளிக்கும்

நிழல் இருக்கை இழந்து போந்து, நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல்

ஒதுங்கி, குறை யிரந்து நிற்ப, நோக்கி, குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தான் இன்று ஆள்கின்றது, அரச என்றான். இத்தகைய பாராட்டுரைகளைக் கேட்ட தசரதன் சந்தோஷ சாகரத்தில் மூழ்கியவனாய், தான் அவருக்குச் செய்ய வேண்டிய காரியம் ஏதாவது உளதானால் அதைக் கூறி அருளும்படி வேண்டினான். விசுவாமித் திரரும், தமது வேள்வியைக் காக்க அரசனது மூத்த குமாரனான இராமனைத் தம்முடன் அனுப்பித் தரும்படி கேட்டார்.

'தருவனத்துள் யான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறா, தவம் செய்வோர்கள்

வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,

செரு முகத்துக் காத்தி, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்

ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும்கொடும் கூற்றின், உளையச் சொன்னான்.

இதைக் கேட்ட தசரதன் பட்ட துயருக்கு அளவே யில்லை. விசுவாமித்திரரது சொல், வேல் பாய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/34&oldid=1367902" இலிருந்து மீள்விக்கப்பட்டது