பக்கம்:சீதா கல்யாணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சீதா கல்யாணம்

என்றனன் என்றலும், முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி, இறுகிக் காலம்

அன்று என, ஆம் என, இமையோர் அயிர்த்தனர்; மேல்

வெயில் சுரந்தது! அங்கும் இங்கும்

நின்றனவும் திரிந்தன. மீ நிவந்த கொழும்

கடைப் புருவம் நெற்றி முற்றச்

சென்றன! வந்தது நகையும்! சிவந்தன கண்!

இருண்டன போய்த் திசைகள் எல்லாம்!

தசரதனது நிலையையும், விசுவாமித்திரர் கோபத்தையும் உணர்ந்த அரசனது குலகுருவான வசிட்டர் இராமனை முனிவருடன் கூட்டி அனுப்புவதால் அவனுக்கு ஏற்பட இருக்கும் நன்மைகளையெல்லாம் விளக்கமாக எடுத்துக்கூறி, இராமனை முனிவருடன் அனுப்பி வைக்கும்படி வேண்டினார். அரசனும் தனது குருவின் ஆணையைச் சிரமேற்கொண்டு, இராமனையும் இலக்குவனையும் அழைத்து விசுவாமித்திரரிடம் அடைக்கலமாகக் கொடுத்தனுப்பினான்.

வந்த நம்பியைத் தம்பி தன்னொடும்

முந்தை நால்மறை முனிக்குக் காட்டி, நல்

தந்தை நீ, தனித் தாயும் நீ இவர்க்கு,

எந்தை! தந்தனன் இயைந்த செய்க என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/36&oldid=965987" இலிருந்து மீள்விக்கப்பட்டது