பக்கம்:சீதா கல்யாணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தாடகை வதை

இராம லக்குமணரைப் பெற்ற விசுவாமித்திரர் தசரதனை வாழ்த்திவிட்டுத் தமது வேள்விச்சாலைக்குக் குமரர் இருவரையும் அழைத்துச் சென்றார். அப்படிப் போகின்ற வழியில் மூவரும் ஒரு பாலை நிலத்தை அடைந்தார்கள். பாலையின் வெம்மையே மிகவும் கடுமையாக இருந்தது. . .

பரிதி வானவன் நிலம் பசை அறப் பருகுவான் விருது மேற்கொண்டு, உலாம் வேனிலே அன்றி வேறு இருது ஒன்று இன்மையால், எரி சுடர்க் கடவுளும் கருதின் வேம் உள்ளமும் காணில் வேம் நயனமும். இடலாம்-உலாவும் இருது-பருவம். வேம்- வேகும்) படியின் மேல் வெம்மையைப் பகரினும், பகரும் நா . முடிய வேம்; முடிய மூடிருளும், வான் முகடும் வேம்; விடியுமேல், வெயிலும் வேம், மழையும் வேம், மின்னினோடு இடியும் வேம்; என்னில், வேறு யாவைவேவாதவே?

இராமன் தனது தந்தை தசரதன் அரசாளும் நாட்டிலே இப்படி ஒரு பகுதி மட்டும் அழிந்து பாலையாக இருப்பதற்குக் காரணம் யாதோ என்று முனிவரிடம் கேட்க, முனிவர் தாடகை என்ற ஓர் அர்க்கி அங்கு வசிப்பதாகவும், அவள்தான் அந்த நாட்டின் வளத்தையெல்லாம் அழித்து.இப்படிப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/37&oldid=651182" இலிருந்து மீள்விக்கப்பட்டது