பக்கம்:சீதா கல்யாணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சீதா கல்யாணம்

பாலை நிலமாக மாற்றி விட்டாள் என்றும் எடுத் துரைத்தார்.

'பெரு வரை இரண்டொடும், பிறந்த நஞ்சொடும், உரும் உறழ் முழக்கொடும், ஊழித் தீயொடும், இரு பிறை செறிந்தெழு கடல் உண்டாம் எனின், வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே!

உரும் உறழ்-இடியை ஒத்த மானும் - ஒக்கும்)

சூடக அரவு உறழ் சூலக் கையினள்,

காடு உறை வாழ்க்கையள், கண்ணில் காண்பரேல் - ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்! தாடகை என்பது அச் சழக்கி நாமமே. * குடக அரவு - கை வளையாக அணிந்துள்ள பாம்பு) 'உளப்பரும் பிணிப்பு உறா, உலோபம் ஒன்றுமே அளப்பு அரும் குணங்ளை அழிக்கும் ஆறு போல், கிளப்பு அரும் கொடுமை அவ்வரக்கி, கேடு இலா வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்.' கிளப்பு அரும் - சொல்லுதற்கு அரிய வைப்பு-நிலம்) இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,

தாடகை, ஒரு பெரிய அஞ்சன மலை, தீயைக் கக்கிக் கொண்டு நடந்து வருவது போல, இவர்கள் முன்னாலே வந்து சேர்ந்தாள். கோபத் தி கக்கும் அவளது கண்களால் இவர்களை அலற விழித்துப் பார்த்தாள். உங்களையெல்லாம் விதி என்னிடம் தள்ளிக்கொண்டு வந்ததோ?’ என்றெல்லாம் ஆர வாரித்து, அவர்கள் மேலே சூலத்தை எறியத் தொடங் கினாள். இப்படியெல்லாம் அவள் செய்தும், பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/38&oldid=651184" இலிருந்து மீள்விக்கப்பட்டது