பக்கம்:சீதா கல்யாணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 37

கொல்ை செய்வது பாவம் என்று எண்ணியே திகைத்து நின்றான் இராமன். இதனை ஊகித்துணர்ந்த விசுவா மித்திரர், தாடகை போன்ற கொடியவளைப் பெண் ணென்று கருதுதல் கூடாது' என்று எடுத்து உரைத்து அவள் கொல்லுதற்கு உரியவளே என்று கூறினார். இதற்கும் இராமன் அசையாதது கண்டு, கடைசியாக, 'இவளைக் கொல்லு!’ என்று கட்டளையே இட்டு விட்டார். முனிவரிட்ட கட்டளையை நிறை வேற்று வதே கடன் எனக்கொண்டு, தன் வில்லினை வளைத்து அவள்மீது இராமன் பாணத்தை எய்தான்.

மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும், கோல வில் கால் குனித்ததும் கண்டிலர்: காலனைப் பறித்து அக்கடியான் விட்ட சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்! தாடகை மீது பாய்ந்த இராமனது அம்பு, அவள் நெஞ்சை ஊடுருவிப் போய் விடுகின்றது.

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று,

- - அன்றே! தாடகையும் அலறி வீழ்ந்து மடிந்தாள். பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முகப் பகழி என்னும் அந் நெடும் கால வன் காற்று அடித்தலும், இடித்து வானில் கல் நெடு மாரி பெய்ய, கடையுகத்து எழுந்த மேகம் மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/39&oldid=651187" இலிருந்து மீள்விக்கப்பட்டது