பக்கம்:சீதா கல்யாணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - சீதா கல்யாணம்

(புகர்முகப் பகழி- ஒருவகை அம்பு அசனி-இடி)

விசுவாமித்திரரது கட்டளையை மறுக்காது செய்த இந்த இராமனது முதற் போரிலே, அரக்கரது உயிரை உண்பதற்கு இதுவரை கூசிப் பயந்து கொண்டிருந்த யமனும், அவர்களுடைய உயிரின் ருசியைச் சற்றே தெரிந்து கொள்கிறான். -

வாச நாள் மலரோன் அன்ன

மாமுனி பணி மாறாத காசு உலாம் கனகப் பைம் பூண்

காகுத்தன் கன்னிப் போரில், கூசி, வாள் அரக்கர் தங்கள்

குலத்து உயிர் குடிக்க அஞ்சி, ஆசையால் உழலும் கூற்றும்

சுவை சிறிது அறிந்தது அன்றே! (காசு-இரத்தினம். கன்னி-முதல்) இராமனது அரிய செய்கையைப் பாராட்டி விண்ண வர் பூச்சொரிந்து அவனை வாழ்த்தினார்கள். விசுவாமித்திரரை, அவனுக்குத் தெய்வப் படைகள் எல்லாம்கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/40&oldid=651189" இலிருந்து மீள்விக்கப்பட்டது