பக்கம்:சீதா கல்யாணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இராம, இலக்குவர் விசுவாமித்திரர்

வேள்வி காத்தல் -

தேவர்கள் விரும்பியபடியே விசுவாமித்திர முனிவரும், இராமனுக்குத் தெய்வப் படைகளை யெல்லாம் கொடுத்து உதவினார். பின்னர் விசுவா மித்திர - ராம லக்குமணர் மூவரும் வேள்விச் சாலைக்குப் புறப்பட்டார்கள் வழியிலே ஒர் அழகிய சோலையிலே தங்கினார்கள். அந்தச் சோலைதான், முன்னாளிலே திருமால் வாமன உருவத் தோடு மாவலிச் சக்கரவர்த்தியிடம் வந்து, மூன்றடி மண் யாசித்துப் பெற்று, அவனைத் தன் திருவடிக் கீழ் இருத்தி, பின்னர் தங்கியிருந்து தவம் செய்த இடம் என்று விசுவாமித்திரர் இராம , லக்குமணருக்கு எடுத்துரைத்தார். . . .

தங்கள் நாயகரின் தெய்வம்

தவம் பிறிது இலை என்று எண்ணும் மங்கைமார் சிந்தை போலத்

தூயது, மற்றுங் கேளாய்! எங்கள் மா மறைக்கும், தேவர்.

அறிவிற்கும், பிறர்க்கும் எட்டாச் செங்கண் மால் இருந்து மேல் நாள்

செய்தவம் செய்தது அன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/41&oldid=651192" இலிருந்து மீள்விக்கப்பட்டது