பக்கம்:சீதா கல்யாணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சீதா கல்யாணம்

திருமால் தவம் செய்த அந்த இடத்திலேயே தாமும் இருந்து யாகம் செய்யப் போவதாகச் சொல்லி, விசுவாமித்திரர் தமது வேள்வியைத் தொடங்குகிறார். இராம, லக்குமணரும், கண்களை இமைகள் காப்பது போல, விசுவாமித்திரருடைய வேள்வியைக் காத் தார்கள். -

எண்ணுதற்கு, ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்

விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,

மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்

கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்.

இவ்வாறு இவர்கள் வேள்வி காத்து வரும்போது ஒருநாள், வில்லும் வாளும் தாங்கிய அரக்கர் கூட்டம் வானிலே திரண்டு, இடி போல ஆரவாரஞ் செய்து அம்புகளை மழை போலப் பொழிய, இராமன் அவைகளையெல்லாம் தனது பாண்த்தால் விலக்கி, ஒரு அம்பால் தாடகை மக்கள் இருவரில் ஒருவனான மாரீசனைச் சமுத்திரத்திலே தூக்கியெறிந்து, மற்றோர் அம்பால் சுவாகுவைக் கொன்று, வேறு கணையால் மற்ற அரக்கர்களையெல்லாம் கொன்று குவித்து விட்டான். உயிர் தப்பிய இராக்கதர்களோ ஒடி யொளிந்து கொண்டார்கள். விசுவாமித்திரரது வேள்வியும் விக்கின. மில்லாமல் முடிவடைந்தது. முனிவனும் இராமனை வாயாரப் புகழ்ந்து போற்றி னார். இவ்வண்ணம் வேள்வி முடித்த பின் விசுவா மித்திரர் விருப்பப்படியே எல்லோரும் மிதிலையில் சனகன் செய்யும் வேள்வியைப் பார்க்கப் புறப்பட் டார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/42&oldid=651194" இலிருந்து மீள்விக்கப்பட்டது