பக்கம்:சீதா கல்யாணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அகலிகை சாப விமோசனம்

இப்படிப் புறப்பட்ட முனிவரும் குமரரும், பல ஆறுகள் சோலைகளையெல்லாம் கடந்து மிதிலா நகரத்தைத் தன்னிடத்தே கொண்ட விதேக நாட்டை அடைந்தார்கள்.

பள்ளி நீங்கிய பங்கயப் பழன நல் நாரை, வெள்ள வான் களை களைவுறு கடைசியர் மிளிர்ந்த கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் எனக் கருதா, அள்ளி நாணுறும் அகல் பணை மிதிலைநாடு அடைந்தார். (பழனம்- வயல். கடைசியர்-பள்ளப் பெண்கள். அகல் - அகன்ற, பனை-மருதநிலம்)

வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க, அரும்பு நாள்மலர், அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப, நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறுமலர் யாழில் சுரும்பு பாண் செயத் தோகை நின்று ஆடுவ சோலை. (சிறை-அணை. நான்ற-ஒழுகுகின்ற தாரைகொள்ஒழுக்கைக் கொண்ட, பாண் செய-இசை பாட தோகை -ഥഥി) - -

அந்த நாட்டிலே அவர்கள் கொஞ்ச தூரம் சென்று மிதிலா நகரத்துக் கோட்டையை நெருங்கும் போது, அங்கே கல்லுருவாயிருந்த அகலிகை, இராமனது பாதத் துளி படவே, தன் சாபம் நீங்கியவளாய்த் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/43&oldid=651196" இலிருந்து மீள்விக்கப்பட்டது