பக்கம்:சீதா கல்யாணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சீதா கல்யாணம்

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து,

அவயவம் அமைக்கும் தன்மை யாது எனத் திகைக்கும் அல்லால்,

மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதையைத் தருதலாலே,

திருமகள் இருந்த செய்ய போது எனப் பொலிந்து தோன்றும்

பொன் மதில் மிதிலை புக்கார். - (ஆதரித்து - விரும்பி, திகைக்கும் - திகைப்பான். சய்ய - சிவந்த)

பொன்னும் மணியும் சிதறிக் கிடக்கும் தெருக்களை யெல்லாம் கடந்து சென்றார்கள். அந்தத் தெருக்களிலே தான் எத்தனை எத்தனை மாடங்கள், நடன சாலைகள், நாடக மேடைகள்!

நெய் திரள்,நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகரவீணை, தண்ணுமை, தழுவித் துங்க, கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல, ஐயம் நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார். (நெய்திரள் நரம்பு - தேன் தாரை போல உருட்சியான நரம்பு தந்த - பாடிய தைவரு - விரலால் தடவுகின்ற. தண்ணுமை - மத்தளம்)

இத்தகைய நடனசாலைகள் பலவும் கடந்து செல்லும்போது, மாளிகைகளின் உப்பரிகைகளி லிருந்து, சன்னல்கள் வழியாகப் பெண்கள் இவர் களைப் பார்க்கிறார்கள். சாளரம் தோறும் சந்திரன் உதித்தது போல அப்பெண்களுடைய முகங்கள் அழகுடன் விளங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/46&oldid=651203" இலிருந்து மீள்விக்கப்பட்டது