பக்கம்:சீதா கல்யாணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சீதா கல்யாணம்

(சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும், சுவரும்,திண் கல்லும், புல்லும் கண்டு உருகப் பெண் கனி நின்றாள்.

(மதர்க்கும் - களிக்கும்) - - அவள் அணிந்திருந்த அணிகள் ஒன்றும் அவளுக்கு அழகு செய்யவில்லை. ஆனால் அந்த அணிகள் சீதை யால் அணியப்படும் பாக்கியம் பெற்ற காரணத்தால் மிகுந்த அழகு பெற்றுப் பிரகாசித்த்ன.

இழைகளும் குழைகளும் இன்ன, முன்னமே மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும் பழகிய எனினும், இப் பாவை தோன்றலால், அழகு எனும் அதுவும் ஓர் அழகு பெற்றதே! - இழை - பெரிய அணிகள். குழை - குண்டலம். மழை பொரு - குளிர்ச்சி பொருந்திய, இன்ன - இவைகள்) - x இப்படிப்பட்ட அழகும் நலமும் ஒருங்குவாய்ந்த சீதையும் இராமனும் ஒருவரையொருவர் பார்த்து விடுகிறார்கள். கண்கள் மட்டும் சந்தித்தன என்று சொல்வதற்கில்லை, உள்ளமும் ஒன்றை யொன்று நாடிக் கலந்து விடுகின்றன. ஒருவருடைய மனத்திலே மற்றொருவருடைய மனது புகுந்து விடுகிறது.

எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள். பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/48&oldid=651208" இலிருந்து மீள்விக்கப்பட்டது