பக்கம்:சீதா கல்யாணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 49

குளிர்ந்த கிரணங்களைப் பலவிடத்தும் வீசுகிறான். நிலவொளியும் வெண்ணெய் அண்ணலான சடையப் பரது புகழ் போல எங்கும் பரவுகின்றது.

வண்ண மாலைக் கை பரப்பி

உலகை வளைந்த இருள் எல்லாம் உண்ண எண்ணித் தண் மதியத்து

உதயத்து எழுந்த நிலாக் கற்றை, விண்ணும் மண்ணும் திசை அனைத்தும்

விழுங்கிக் கொண்ட விரி நல் நீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன்

புகழ் போல் எங்கும் பரந்துளது, ஆல். (வண்ணம்-நிறம் பண்ணை வெண்ணெய்-வயல்கள் குழ்ந்த திருவெண்ணெய்நல்லூர் -

நிலவின் ஒளி குளிர்ந்ததாக இருந்தாலும், காதல் னைப் பிரிந்த சீதைக்கு வெப்பத்தையே கொடுக்கிறது. 'கரு நெருப்பிடையே பிறந்த வெண்ணெருப்பே' என்றெல்லாம் அவள் சந்திரனைப் பழிக்கின்றாள். அவளுடைய தேகத்தின் வெம்மையைத் தாங்காது, அவளது படுக்கையில் விரித் திருந்த தாமரை மலரும் வெதும்பிற்று தோழியர், அவளுடைய வெப்பத்தைத் தணிக்கச் சந்தனத்தை அள்ளி அள்ளி அவள் உடலில் பூசுகிறார்கள். இதனாலெல்லாம் வெப்ப நோய் குறைந்து போய் விடுமா? மற்ற நோய்களுக் கெல்லாம் மருந்திருத்தல் போல, ஆசை நோய்க்கு மருந்தும் உண்டா? - - - -

வாச மென் கலவைக் களி வாரி, மேல் பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/51&oldid=651215" இலிருந்து மீள்விக்கப்பட்டது