பக்கம்:சீதா கல்யாணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சீதா கல்யாணம்

எண்ணின், ஈது, அலது, என்று அறியேன். இரு கண்ணினுள்ளும் கருத்தினும் காண்பன், ஆல்'

இம்முறை - இப்படிப்பட்ட)

இப்படிச் சீதையை நினைந்து நினைந்து சிந்தை நொந்த இராமனது உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்று கிறது: "ஆம், நான் கன்னி மாடத்துக் கண்ட பெண், கன்னியா, அல்லது மணம் முடிந்த மங்கையா? மணம் முடிந்த மங்கையாயிருந்தால் எத்தகைய பெரிய தவறு செய்து விட்டேன்? ஒருநாளும் தவறான வழியில் செல் லாத என் மனம் இன்று தவறான வழியில் செல்லுமா? ஒருபோதும் அவள் மணம் முடிந்த பெண்ணாயிருக்க முடியாது. என் உள்ளம் கவர்ந்த காரிகை கன்னியே! என்றெல்லாம் நினைக்கிறான் இராமன்.

ஏகும் நல்வழி அல்வழி என் மனம் ஆகுமோ? அதற்கு ஆகிய காரணம், பாகு போல் மொழிப் பைந்தொடி கன்னியே ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே! இரவு கழிந்தது, பொழுது புலர்ந்தது. கீழ்வான மாகிய அரங்கத்திலே பாலசூரியன் உதயமாகிறான். பிரிந்து சென்ற காதலர் வரவு கண்டு மகிழும் காதலிகள் போலப் பொய்கையிலே தாமரை மலர்கள் விரிந்து அழகுடன் விளங்குகின்றன. எங்கு பார்த்தாலும் வேத கோஷம், கின்னரர்களது இசைபாடல் சமுத்திரமாகிய மத்தளமோ அதிர்கின்றது.கடல் அலைகளிலே மிதந்து வரும் சூரியன், சிதாகாசத்திலே ஆனந்த நர்த்தமிடும் நடராஜனைப் போலவே காட்சியளிக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/54&oldid=651222" இலிருந்து மீள்விக்கப்பட்டது