பக்கம்:சீதா கல்யாணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 53

எண்ணரிய மறையினொடு கின்னரர்கள் - இசைபாட, உலகம் ஏத்த,

விண்ணவரும், முனிவர்களும், வேதியரும்

கரம் குவிப்ப, வேலை என்னும் -

மண்ணும் அணி முழவு அதிர,வான் அரங்கின்

நடம்புரி வாள் இரவியான -

கண்ணுதல் வானவன் கனகச் சடை விரிந்தால்

என, விரிந்த கதிர்கள் எல்லாம். -

(எண்னரிய - அளவில்லாத உலகம் - உயர்ந்தோர் வாள் இரவி - ஒளி பொருந்திய சூரியன் கண் நுதல் வானவன் - ஒரு கண்ணை நெற்றியிலே உள்ள சிவன், கனகச் சடை - பொன்நிறச்சடை)

சூரியோதயத்தில் நித்திரை நீங்கி எழுந்த இராமன் காலைக்கடன்களை முடித்துவிட்டு, விசுவாமித்திரர், இலக்குவன் இவர்களுடன் மிதிலை மன்னனது வேள்விச்சாலை சென்று சேர்கிறான். சனகனும் வேள்வி முடிந்தவுடன், தன் சபாமண்டபத்திற்குச் சென்று, அங்கே தன்பக்கத்திலே இராம லக்குமணரை இருக்கச் செய்து, முனிவரோடு வீற்றிருந்தான். சனகன் முனிவரை வணங்கி, அவ்விளங்குமரர் யாவர் என்று சொல்லும்படி வேண்ட, முனிவரும், இவர் ரகுகுலத்து அரசனான தசரதன் புத்திரர்; உன்னுடைய வேள்வி காண வந்தார்கள்; உன்னுடைய சிவதனுசையும் ஒரு கை பார்ப்பார்கள் என்பதை மிகவும் வினயமாகக் கூறினார்.

இருந்த குலக் குமரர் தம்மை இரு கண்ணும்

முகந்து அழகு பருக நோக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/55&oldid=651225" இலிருந்து மீள்விக்கப்பட்டது