பக்கம்:சீதா கல்யாணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. விசுவாமித்திரர் இராமனது குலமரபு கூறுவது

'பூனி ரங்கத்திலே பரஞ்சோதியாகிய ரங்கநாதனைக் கொண்டுவந்து பிரதிட்டை செய்த இrவாகு என்ற அரசன் வழி வந்தவன் தசரதன். இவர்கள் குல முன்ன வர்களில் ஒருவனான சிபிச்சக்கரவர்த்தி, தான் அடைக் கலம் கொடுத்த புறாவுக்காகத் தன் உயிரையே கொடுத் தான் என்ற புகழ் உலகம் அறியாததா?’ என்று விசுவா மித்திரர் இராமனது குலப்பெருமையை விரிவாக எடுத்து உரைக்கிறார்:

'இன் உயிர்க்கும் இன் உயிராய்

இரு நிலம் காத்தார் என்று பொன் உயிர்க்கும் கழலவரை

யாம் போலும் புகழ்கிற்பாம்! மின் உயிர்க்கும் நெடுவேலோய்!

இவர் குலத்தோன், மேல், பறவை மன் உயிர்க்குத் தன் உயிரை

மாறாக வழங்கினன், ஆல்! (பொன்-அழகு, உயிர்க்கும் - விளக்கும். கழலவரைவிர்க்கழல் அணிந்த அரசர்களை மேல் - முன்காலத்தில், மாறாக - ஈடாக) -

இத்தகைய குலத்திலே, தசரதனது புதல்வர்களாய் இராமர், இலக்குமணர், பரதர், சத்துருக்கனர் என்று நான்கு குமாரர்கள் தோன்றினார்கள். ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/57&oldid=651230" இலிருந்து மீள்விக்கப்பட்டது