பக்கம்:சீதா கல்யாணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 57

இவர்கள் நால்வரில் இருவரைத்தான் நான் என் வேள்வி காப்பதற்காகத் தசரதனிடம் யாசித்துப் பெற்று வந்தேன். வருகிற வழியில் எதிர்ப்பட்ட தாடகையை இராமன் தனது கன்னிப் போரில் வீழ்த்தி வெற்றி பெற்றான். அவனது வில் வன்மையை அங்குதான் கண்டு மகிழ வேண்டும்.

அலை உருவு அக்கடல் உருவத்து ஆண்தகைதன் நீண்டு நிலை உருவப் புயவலியை நீ உருவநோக்கு, ஐயா! உயர்ந்த உலை உருவக் கனல் உமிழ் கண் தாடகைதன் உரன் உருவி, மலை உருவி, மரம் உருவி, மண் உருவிற்று ஒரு வாளி

இவன் விட்ட அம்பு ஒன்றினால் தாடகை புத்திரரில் ஒருவனாகிய சுவாகு மாண்டு மடிந்தான். மற்றொரு புத்திரனான மாரீசனோ போன இடம் தெரியாது போய் ஒளிந்து கொண்டான். என் தவமும் நிறைவேறி யது. நான் இவனுக்குக் கொடுத்த படைக்கலங்கள் எல்லாம், நானும் நாணும்படி அவனுக்கு ஏவல் செய்கின்றன. இன்னும் இவன் பாதத் துரளியால் அகலிகை சாப விமோசனம் பெற்றது இவன் மகிமையை நன்றாக வெளிப்படுத்தவில்லையா?” என்றெல்லாம் சொல்லி முடித்தார் விசுவாமித்திரர்.

கோதமன்தன் பன்னிக்கு -

முன்னை உருக் கொடுத்தது, இவன்

போது நின்றது எனப் பொலிந்த

பொலன் கழல் கால் பொடி, கண்டாய்!

காதல் என்தன் உயிர் மேலும்

இக் கரியோன் பால் உண்டு, ஆல்!

ஈது இவன்தன் வரலாறும்

புயவலியும்' என உரைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/59&oldid=651235" இலிருந்து மீள்விக்கப்பட்டது