பக்கம்:சீதா கல்யாணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை 'ஒரு காவியத்தைப் பற்றி குழந்தைகளிடம் பிரசங்கம் செய்யாதே. காவியத்தையே குழந்தைகளின் கையில் கொடுத்து விடு' என்று அனடோல் பிரான்ஸ் என்ற அறிஞர் சொல்லுகிறார். இது எவ்வளவு சரியான யோசனை .இந்த ஆலோசனையின்படி நடக்க விரும்பியே,'சீதா கல்யாணம்' எழுதப்பட்டுள்ளது. காவியத்தைப் பற்றியாவது, கம்பனது கவிதையைப் பற்றியாவது விரிவான விமரிசனம் எழுதுவது நோக்கமில்லை. அது அவசியமும் இல்லை. தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர் அனைவரும்,கம்பன் யார்? அவன் எழுதிய காவியம் எப்படிப்பட்டது என்பதைத் தாமே தெரிந்து கொள்ளக் கூடிய முறையில் இதை எழுதி முடிக்க எண்ணினேன். இந்த முயற்சி எவ்வளவு தூரம் பயன் அளித்திருக்கிறது என்பதை இனித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

 கம்ப ராமாயணம் பால காண்டத்தில் மொத்தம் ஆயிரத்து நானூறு பாடல்கள் இருக்கின்றன. அவைகளில் நூறு பாடல்களே இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கதைத் தொடர்ச்சியையும் இளைஞர் தெரிந்து கொள்ள, இடையிடையே வசனப் பகுதியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்நூல் எழுதுவதற்கு என்னைத் தூண்டியவர் காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளரான நண்பர் ஸ்ரீ.சா. கணேசன், அவர்களுடைய தூண்டுதல் இல்லாவிட்டால், தகுதி ஒரு சிறிதும் இல்லாத நான் இந்த முயற்சியில் தலையிட்டிருப்பேனா என்பது சந்தேகம்தான். அவர்களுக்கும், இத்தகைய பணியில் இடைவிடாது என்னைத் தூண்டிவரும் அருங்குணச் செல்வரும் கம்பன் கழகப் பொக்கிஷதாரருமான நண்பர் ஸ்ரீ நா. சிதம்பரம் அவர்களுக்கும் என் நன்றி உரியதாகும். 


                  தொ.மு.பாஸ்கரன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/6&oldid=1367336" இலிருந்து மீள்விக்கப்பட்டது