பக்கம்:சீதா கல்யாணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 59

சதாநந்தன் சொல்லுகிறான். தக்கன் உமாதேவியை அவமதித்த பொழுது, சிவனுடைய அம்சனான வீரபத்திரன் இவ்வில்லுடனே தோன்றி, அவன் யாகசாலை சேர்ந்து, அவனையும் அவனுக்குத் துணையாயிருந்த தேவர்களையும் முறியடித்து விரட்டி விட்டு, தன் கோபம் தணிந்தவுடனே, இவ்வில்லை இந்தச் சனகனது முன்னோன் ஒருவனிடம் கொடுத்து வைத்திருந்தான். இந்த வில் சனகனிடம் இருக்கும் போது, ஒருநாள், நாங்கள் யாகம் செய்ய நிலத்தைச் சுத்தப்படுத்துவதற்காகப் பொற் கலப்பையினால் உழுதோம். உழுத கொழுவின் முனையிலே இந்தச் சீதை தோன்றினாள். -

'உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற புவி மடந்தை உரு வெளிப்பட்டென, புணரி எழுகின்ற தெள் அமுதோடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கித் தொழுகின்ற நல் நலத்துப் பெண்அரசி தோன்றினாள். (உதிக்கின்ற கதிர் - உதய சூரியன் புனரி - கடல், இழிந்து-இழிவடைந்து நல்நலம் - மிக்க அழகு)

'குணங்களை என் கூறுவது?

கொம்பினைச் சேர்ந்து அவை உய்யப் பிணங்குவன, அழகு இவளைத்

தவம் செய்து பெற்றது, காண்! கண்ம் குழையாள் எழுந்ததன் பின்,

கதிர்வானில் கங்கை யெனும் அணங்கு இழியப் பொலிவு அழிந்த

ஆறு ஒத்தார் வேறு உற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/61&oldid=651239" இலிருந்து மீள்விக்கப்பட்டது