பக்கம்:சீதா கல்யாணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 61

புனைந்த சடை முடி துளக்கி,

போர் ஏற்றின் முகம் பார்த்தான்: வனைந்தனைய திருமேனி

வள்ளலும், அம் மாதவத்தோன் நினைந்த எலாம் நினைந்து, அந்த

நெடும் சிலையை நோக்கினான். முடிதுளக்கி-தலையை அசைத்து வனைந்தனையசித்திரத்தில் எழுதினால் போன்ற) -

சதாநந்தன் கூறியதையெல்லாம் கேட்டசபையோர், 'இதென்ன நியாயமற்ற காரியம்? சீதையை இராமனுக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டுமென்று விரும்பி னால், "அப்பா, பிடி' என்று சீதையைப் பிடித்து இராமனிடம் கொடுத்து மணத்தை முடித்து விடாமல், இத்தகைய ஒரு பெரிய வில்லை எடுத்து இந்தச் சிறு பிள்ளை முன்வைத்து,"இதை வளைத்துப்பார், தம்பி’ என்று சொல்வது எவ்வளவு அறிவற்ற காரியம்!” என்று பலவாறு பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால், “கொள்” என முன்பு கொடுப்பதை அல்லால், வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இப் பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார். (வெள்ளம் - கங்கை நீர் அனைத்தவன்-தலையில் ஏந்தியவன்) .

இப்படி எல்லோரும், இராமனது இளமையையும் வில்லினது வலிமையையும் சிந்தித்துக் கொண்டிருக் கும்போதே, இராமன் எழுந்தான்; வில்லருகே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/63&oldid=651244" இலிருந்து மீள்விக்கப்பட்டது