பக்கம்:சீதா கல்யாணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - சதா கல்யாணம்

சென்றான்; சீதைக்குத் தான் அணியப்போகும் மண மாலையை எவ்வளவு எளிதாகவும் அலகூவியமாகவும் எடுப்பானோ அப்படியே அதை எடுத்தான்.

ஆடக மால் வரை அன்னது தன்னைத் தேடு அரும் மாமணி சீதை எனும், பொன் சூடக வால் வளை சூட்டிட நீட்டும் ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான். (ஆடகம் - பொன். மால் - பெரிய குடகம் - ஒரு கைய்னி வால் வளை- வெண்ணிறச் சங்கு வளையல்)

வில்லை எடுத்ததைத்தான் சபையிலுள்ளவர்கள் பார்த்தார்கள்; உடனே வில்லொடித்த சத்தத்தைத்தான் அவர்கள் கேட்டார்கள். வில்லைக் கையிலே எடுத்த வன், வில்லின் முனையைக் காலின் பெருவிரலினால் எப்படி அழுத்தினான் என்பதையும், எப்படி வில்லை வளைத்து நாணை மற்றொரு முனையில் பூட்டினான் என்பதையும் ஒருவரும் பார்க்கவில்லை. காரணம்? . அவ்வளவு விரைவிலே வில்லொடிந்து விட்டதுதான்.

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளின் மடுத்தது, நாண் நுதி வைத்தது, நோக்கார்: கடுப்பினின் யாரும் அறிந்திலர்: கையால் எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார் (டிடுத்தல் - அழுத்தல், கடுப்பு - விரைவு இற்றது - ஒழ்ந்தது)

வில்லொடிந்த ஒசை, சுவர்க்கம், மத்தியம், பாதலம் என்ற மூன்று உலகங்களிலும் சென்று இடித்தது. இனி. சீதா கல்யாணம் நிறைவேறும் என்று எல்லோரும் குதுகலித்தார்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/64&oldid=651247" இலிருந்து மீள்விக்கப்பட்டது