பக்கம்:சீதா கல்யாணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 63

பூ மழை சொரிந்தார் விண்ணோர்:

பொன் மழை பொழிந்த மேகம்: பாமமார் கடல்கள் எல்லாம் - பல் மணி தூவி ஆர்த்த: கோ முனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி, கொற்ற நாம வேல் சனகற்கு இன்று

நல்வினை பயந்தது' என்னா.

(பாமம் -நுரை. நாம வேல் - பகைவர்களுக்கு அச்சம் தரும் வேல். பயந்தது-பயனைஅளித்தது என்னா-என்று

o

எண்ணி)

'இராமனுக்கு ஏற்ற பெண் சிதையென்றால் சீதைக்கு ஏற்ற மாப்பிள்ளையும் ராமனேயாம். இத்தகைய ஒரு நல்ல மணவினையைக் காண்பதற்குத்தான் இவ்வுலகம் என்ன தவம் செய்துள்ளதோ இராமனை இந்த நகருக்குக் கூட்டிவந்த முனிவனது பெருமைதான் என்ன! என்றெல்லாம் நகர மக்கள் தங்கள் உள்ளத்தில் எழுந்த ஆனந்தத்தைப் பலவிதமாகச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

'நம்பியைக் காண நங்கைக்கு

ஆயிரம் நயனம் வேண்டும்! "கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்' 'தம்பியைக் காண்மின்' என்பார்:

'தவம் உடைத்து உலகம்' என்பார்: 'இம்பர் இந்நகரில் தந்த

முனிவனை இறைஞ்சும் என்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/65&oldid=651249" இலிருந்து மீள்விக்கப்பட்டது