பக்கம்:சீதா கல்யாணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தசரதன் பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்படல்

சினகன் அனுப்பியதுதர், அயோத்தியை அடைந்து, இராமன் தசரதனைப் பிரிந்து முனிவருடன் சென்றபின் செய்த அரிய செயல்களையெல்லாம் விரிவாய் எடுத்துக் கூறி, மிதிலையில் வில்லொடித்ததையும் சொல்லி, அரசன் கொடுத்த திருமுகத்தையும் சமர்ப்பித் தனர். மண ஒலை வாசிக்கக் கேட்ட மன்னவன், அப்படியே பூரித்து, தன் சேனைப் பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்பட்டான். சேனாவீரர் தாங்கிச் செல்லும் வெண் குடைகள், கொடிச் சீலைகள் எல்லாம் வானத்தை நிறைத்து விடுகின்றன. சேனைத் தலைவர் அணிந்திருந்த ஆபரணங்களின் பிரகாசமும், சேனாவீரர் முழக்கும் பேரிகை ஒலியும், மின்னி இடிப்பதுபோல் இருக்கின்றன. சேனையோடு செல் லும் மாதர்கள் கூட்டத்திற்கும் குறைவில்லை.சேனைத் தொகுதியைச் சொல்ல வேண்டுமென்றால், தசரதன் தன் இருக்கையை விட்டு எழுவதன் முன்னமேயே சேனையின் முன்னணி மிதிலை சென்று சேர்ந்து விட்டது எனலாம். - -

உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்! அழுந்திய உயிர்க்கு எலாம் அருள் கொம்பு ஆயினான் எழுந்திலன்: எழுந்து இடைப் படரும் சேனையின் கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/68&oldid=651256" இலிருந்து மீள்விக்கப்பட்டது