பக்கம்:சீதா கல்யாணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சீதா கல்யாணம்

மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை, பண்ணும் நரம்பில் பயிலா இசை, பாணி ஓதை, . கண்ணும் உடை வேய் இசை, கண்ணுளர் ஆடல்தோறும் விண்ணும் மருளும்படி விம்மி எழுந்தது, அன்றே!

ஒதை - ஒசை. கண் - கணுக்கள். வேய் = மூங்கில், கண்ணுளர்-நாடகமாடுவோர்) -

இரவும் கழிந்தது; பொழுதும் விடிந்தது. பின்பு சேனை புறப்பட்டு, சோணையாற்றங்கரையை அடைந் தது. உச்சி நேரத்தில் பூக் கொய்யவும், நீராடவும் விரும்பி, மைந்தரும் மாதரும் தடாகங்கள் நிறைந்த ஒரு சோலையைச் சேர்ந்தார்கள். அந்தச் சோலையிலே யுள்ள செடி கொடிகளை மாதர்கள் தம் கைகளால் மெல்லெனத் தீண்டியபோது, அக்கொம்புகள் தாழ்ந்து அவர் தம் பாதங்களில் மலர் சொரிந்து வணங்கின. இப்படிப் பூங்கொம்புகளே இவர்களை வணங்கினால், மற்ற ஆடவர்கள் இவர்களை வணங்குதலுக்குக் கேட்பானேன்! . . . .

நஞ்சினும் கொடிய நாட்டம்

அமுதினும் நயந்து நோக்கி, செம் செவே கமலக் கையால்

தீண்டலும், நீண்ட கொம்பர் தம் சிலம்பு அடியில் மென் பூச்

சொரிந்து உடன் தாழ்ந்த என்றால், வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு

யாவரே வணங்கலாதார். - இப்படிப் பூப்பறிக்கும் இடத்தில் நடந்த காதல் நிகழ்ச்சிகளோ அனந்தம். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/70&oldid=651261" இலிருந்து மீள்விக்கப்பட்டது