பக்கம்:சீதா கல்யாணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 69

‘போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் மாரன் அனையான், மலர் கொய்து இருந்தானை, வந்(து) ஒர் கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள்

கண் புதைப்ப, - 'ஆர்? என்னலோடும், அனல் என்ன

அயிர்த்து உயிர்த்தாள். (பொலம் - அழகு. அயிர்த்து உயிர்த்தாள் - பெரு

மூச்செறிந்தாள்)

யாழ் ஒக்கும் சொல்பொன் அனையாள், ஓர் இகல் மன்னன் தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள், ஆழத்துள்ளும் கள்ளம் நினைப்பாள், அவன் நின்ற சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும். (ஒர் இகல் மன்னன் - ஒப்பற்ற வலிமையுடைய அரசன்,

தாழத் தாழாள் - தன்னை வணங்கிய போதும் மனம்

இளகாதவள். ஆழத்துள்ளும் - ஆழ்ந்த மனத்துள்ளும். கள்ளம் - சூழ்ச்சி) -

பூக்கொய் விளையாட்டு முடிந்ததும், மைந்தரும்

மாதரும் தடாகங்களில் இறங்கி நீர் விளையாட்டை ஆரம்பித்து விடுகிறார்கள். காதலன் காதலியர் ஒருவர் மேலொருவர் வாசனைப் பொடிகளை வீசி, பூமாலை கொண்டடித்து, நீரை அள்ளி இறைத்து விளையாடு வாராயினர்.

வண்டு உணக் கமழும் சுண்ணம்,

வாச நெய், நானத்தோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/71&oldid=651263" இலிருந்து மீள்விக்கப்பட்டது