பக்கம்:சீதா கல்யாணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 71

சேனை பரிவாரங்களுடன் எதிர்கொண்டு வந்து

உபசரித்தான். தசரதனும் சனகனும் ஒருவரையொருவர்

தழுவிக் கொண்டார்கள்.இராம, லக்குமணரும் தங்கள் தந்தையை அடைந்து வணங்கினார்கள். அவர்களைத் தசரதனும் ஆர்வத்தோடு ஆலிங்கனம் செய்தான். இருவரும் பின்னர் தாயாரைத் தொழுதார்கள். பரதனும் சத்துருக்கனனும் இராம, லக்குமணரைப் பணிந்தார்கள். இராமன் சேனையை நடத்த, எல்லோருமாக மிதிலை சென்று சேர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/73&oldid=651268" இலிருந்து மீள்விக்கப்பட்டது