பக்கம்:சீதா கல்யாணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. இராமன் உலா வருதல்

இராமன். இப்படி வீதியிலே உலா வருவதைப் பார்க்க, மாதர்கள் மாளிகைகளினின்றும் வெளியே ஒடி வந்தார்கள். -

பஞ்சி சூழ் மெல்லடிப்பாவைமார் பண்ணை சூழ், மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் நஞ்சு சூழ் விழிகள் பூ மழையின் மேல் விழ நடந்து, இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான்.

(பஞ்சி- செம்பஞ்சுக் குழம்பு. பண்ணை - பெண்களின் கூட்டம். விராய் - கலந்து. மழையின் மேல் - மழையினும் அதிகமாக, இஞ்சி - மதில்) - *

மான் கூட்டமும், மயில் கூட்டமும் மின் கூட்டமும் போல, மாதர்கள் நெருக்கமாக வந்து தேனுண்ண மொய்க்கும் வண்டுகள் போல, இராமன் அழகைப் பருகுகின்றனர்.

மான் இனம் வருவ போன்றும்,

மயில் இனம் திரிவ போன்றும், மீன் இனம் மிளிர்வ போன்றும்

மின் இனம் மிடைவ போன்றும், தேன் இனம் சிலம்பி ஆர்ப்ப,

சிலம்பு இனம் புலம்ப, எங்கும் பூநனை கூந்தல் மாதர்,

பொம் எனப் புகுந்து மொய்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/74&oldid=651270" இலிருந்து மீள்விக்கப்பட்டது