பக்கம்:சீதா கல்யாணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சீதா கல்யாணம்

நெய்வளர் விளக்கம் ஆட்டி, நீரோடு பூவும் தூவி, தெய்வமும் பராவி, வேதபாரகர்க்கு ஈந்து செம்பொன், ஐயவி துதலில் சேர்த்தி, ஆய்நிற அயினி சுற்றி, கைவளர் மயில் அனாளை வலம் செய்து காப்பும் இட்டார். (விளக்கம் ஆட்டி-தீபத்தைச் சுழற்றிக் காட்டிராவிபிரார்த்தித்து. ஆய்நிற அயினி-சிவந்த ஆலத்திநீர், ஐயவி

- வெண் கடுகுப் பொடி)

சீதையைத் தாதியர் சபா மண்டபத்திற்கு அழைத்து வந்தார்கள். அவள் அழகைக் கண்குளிரக் கண்ட மாதவரான விசுவாமித்திரரும், இவ்வளவு அழகுடைய பெண்ணொருத்தியைப் பரிசாகப் பெறுவது என்றால், இராமன் இந்தப் பெரிய சிவதனுசை மட்டுமா ஒடிப்பான்! மகாமேரு பர்வதத்தைக் கூட முறித்து விடுவான்!” என்று நினைத்துக் களிக்கிறார். . .

அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைத்தான்: 'பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன், -

நச்சுடை வடிக்கண் மலர் நங்கை இவள் என்றால், இச்சிலை கிடக்க, மலை ஏழையும் இறானோ'

(அச்சு என - பிற மாதர் அழகுக்கு எல்லாம் ஆதாரம் போன்ற படிவம் - வடிவம். அடல் - வலி, நச்சு - விருப்பம். வடிக்கண் - மாவடுவை யொத்த கண்) -

வில்லை ஒடித்துத் தன்னை மணக்க இருக்கும் வீரன் 'இளைய கோவோடும், பராவரும் முனியொடும் பதிவந் தெய்தியவன்' என்றே முன்பு தாதி சொன்னதைக் கேட்டுச் சந்தேகம் நீங்கியவளாயிருந்த சீதையும், இப்போது அச்சந்தேகம் முழுதும் நீங்கத் தன்

  • அந்தணன் வசிட்டரைக் குறிப்பதாகச் சிலர் கூறுவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/78&oldid=651280" இலிருந்து மீள்விக்கப்பட்டது