பக்கம்:சீதா கல்யாணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சீதா கல்யாணம்

வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ, ஏனையர் துவும் இலங்கு ஒளி முத்தம், தான் நகு நாள் மலர், என்று இவை தம்மால் மீன் நகு வானின் விளங்கியது இப் பார். இலங்கு-பிரகாசிக்கும்.தான்நகுநாள்மலர்-தானாக மலர்ந்த பூக்கள். மீன் நகு - நகூடித்திரங்களால் விளங்குகின்ற) -

இராமன்மங்கல வேள்வித் தீயில் மந்திரம் ஓதி ஆகுதி பெற்று, தையல் தளிர்க் கையைப் பிடித்துக் கொண்டு, அந்த மங்கலத் தீயை வலம் வந்தான். அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கிரியையும் நிகழ்ந்தது. இவ்வாறு மணம் முடிக்கப்பெற்ற தம்பதிகள் இருவரும் முனி வரையும், தசரதனையும், தாயர் மூவரையும் வணங்கி னார்கள். -

ஆர்த்தன பேரிகள்: ஆர்த்தன. சங்கம்! ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர்! ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு! ஆர்த்தன வண்டினம்! ஆர்த்தன வேலை! (வேலை - கடல். ஆர்த்தன - ஆரவாரம் செய்தன.)

சனகன், தனது தம்பி குசத்துவனது குமாரிகள் மூவரையும், முறையே இராமனுக்கு இளையவர் மூவருக்கும் மணம் செய்து கொடுக்க, வசிட்டர், சீதா ராமருக்குச் செய்தது போலவே, அம்மூன்று தம்ப களுக்கும் மன வினை முடிப்பித்தார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/82&oldid=651290" இலிருந்து மீள்விக்கப்பட்டது