பக்கம்:சீதா கல்யாணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்ப ராமாயணம்

மனிதனுக்குப் பொதுவாக வாழ்க்கையிலே இன்பம் தருவது எது என்று கேட்டால், உயர்ந்த காவியங் களைப் படித்து, அக்காவியங்களிலுள்ள கவிச் சுவையை அனுபவிப்பதுதான் என்று லேசாகச் சொல்லிவிடலாம். ஆத்ம அனுபவத்துக்கு அடுத்த படியாகக் கவிதை அனுபவம்தான் மனிதனுக்கு ஆனந்தம் தரக்கூடியது. தமிழன் இத்தகைய கவிதை அனுபவம் பெற வேண்டுமானால், அவன் அதை யாரிடம் எதிர்பார்க்கலாம்? கம்பனிடம்தான் எதிர் பார்க்க முடியுமேயொழிய வேறு புலவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

இம்பர் நாட்டில் செல்வம் எலாம் எய்தி அரசாண்டு இருந்தாலும், உம்பர் நாட்டில் கற்பகக் கா ஓங்கும் நிழல் இருந்தாலும், செம்பொன் மேரு அனைய புயம் திறல் சேர் இராமன் திருக் கதையில் கம்பநாடன் கவிதையில் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே!

என்றெல்லாம் தெரியாமலா பாடி வைத்தார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/9&oldid=1367677" இலிருந்து மீள்விக்கப்பட்டது