பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவஜீவன் இயக்கம் 10s சாயக் கல்விக்கும் தொழிற்கல்விக்கும் தனிப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்திரீகளுக்கு வீட்டு வேலைகளோடு குழந்தை வளர்ப்பு, உடைகள் தயாரித் தல், காயம்பட்டோருக்கும் நோயாளருக்கும் சிகிச்சை செய்தல் ஆகியவை பற்றித் தனிக் கல்விச் சாலைகள் போதித்து வங்தன. எந்த இடத்திலும், யாரையும் சிங்தையை அடக்கிச் சும்மா இருக்க விடவில்லே. இதற்கெல்லாம் கைம்மாருக ஐனங்களும் அரசாங் கத்தை அதிகமாக நேசிக்கலாயினர். குடியான வர்களுக்கு விதைகளும், கடனும், கூட்டுறவு சங்கங்களும் கிடைத்தவுடன் அவர்கள் கோமின்டாங் சபையையும் அது கடத்தி வந்த அரசாங்கத்தையும் போற்ற ஆரம்பித்தனர். m சீனவின் மறு பிறப்புக்காகவே சியாங் பிறக் திருந்தார் என்று சொல்லலாம். அவருடைய பிறப்பும் வளர்ப்பும் அவர் வாழ்க்கையைச் செம்மையான அடிப்படையில் அமைத்ததோடு கில்லாமல், கோடிக் கணக்கான குடும்பங்களை ஒழுங்குபடுத்தி அமைக்க வும் காரணமாயின. நிறைந்த கல்வியும் கேள்வியும் இல்லாமல் பெரிய தேசத்தின் பிரச்னைகளைப் பரிசீலனை செய்ய முடியுமா? சுயகலத் தியாகமும், துறவுக் குணமும், தவ முறையும், விடா முயற்சியும், தைரியமும், உறுதியும் இல்லாத ஒரு தலைவரால் தாம் கண்டுபிடித்த பரிகாரங்களைச் செயலில் நிறைவேற்றி வைக்க முடியுமா? சர்வ ஜனங்களிடமும் பரந்த அன்பு இல்லாமல் ஒரு தலைவர் தம் அதிகாரங்களேயும் ஆதிக்கத்தையும் பெருக்கிக் கொண்டே போல்ை, முடிவில் கொடிய சர்வாதிகாரியாகி விடுவதைத் தவிர, தேசம் சன்மார்க்கத்தில் புத்துயிர் பெற்று எழுந்து வலிமைய்டைய முடியுமா? ஆகவே, சீனவின் புனர் ஜன்மத்திற்காக நவஜீவன் இயக்கத்தை ஆரம்பித்து வைத்த தலைவர் மேற்கூறிய கற்குணங்கள் எல்லாம்