பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சியாங் சே-ஷேக் கற்பனையாக அன் சி, வாழ்க்கையில் கிதரிசனமான கவுடங்களின் நடுவே வாழ்ந்து வங்ததை எண்ணுங் தோறும், என் தாயின் அபிலாவுைகளைத் தக்க முறையில் நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் எனக்கு இருக்கவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்...' 'சுவர்க்கம் உன் தாயின் பாதத்தடியில் இருக்கிறது என்று நபிகள் நாயகம் உபதேசித்தார். சியாங் கே-வுேக் அப்படியே அதைக் கண்டு கொண்டார். சிறு வயதில் சியாங் குன்றுகளிலிருந்து பெருகி வந்த சிற்ருறுகளைப் போய்ப் பார்த்துக்கொண் டிருப்பது வழக்கம். கூட்டம் கூட்டமாக மீன்கள் வெள்ளத்தை எதிர்த்து நீங்துவதைப் பார்த்துக் கொண்டே யிருப்பார். அவைகள் நீங்துவது பட்டாளங்கள் அணிவகுத்துச் செல்வதுபோல் அவருக்குத் தோன்றும். இளமையில் அவர் அதிகத் துஷ்டத்தனம் செய்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம் மட்டும் உணவெடுத்துச் சாப்பிடுகிற மூங்கில் குச் சி ஒன்றைத் தொண்டையில் வெகு தாரம் செலுத்திக்கொண்டு விட்டார். வயிற்றில் எவ்வளவு ஆழமிருக்கிறது என்று பார்ப்பதற்காக இந்தப் பரீட்சையை நடத்திவிட்டார் 1 பிறகு அவருடைய பாட்டனர் வந்து மிகவும் சிரமப்பட்டுக் குச்சியை வெளியே எடுத்தாராம். படிப்பில் சியாங் சாமர்த்தியமா யில்லாமல், விளையாட்டுக்களில் தலைமை வகிப்பதில் மிகவும் ஊக்கமாக இருந்தாராம். அந்தப் பருவத்திலிருந்தே ஒழுக்க முறைகள் அவருக்குப் பழக்கமாகி விட்டன. ஒரு சமயம் ஒரு சிறு பையனைப் பெரிய மாணவன் ஒருவன் அடித்துவிட்டான். வழக்கு சியாங்கினிடம் வந்தது. அவ்ர் வகுப்பை விட்டு முன்கூட்டியே வெளியே போய்க் காத்திருந்து, அந்த மாணவன் வந்தவுடன், அவனை ஓங்கி ஒரு போடு போட்டு