பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 111 விட்டார். எளியாரை வலியார் வாட்டலாமா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் அல்லவா! ஆல்ை, உபாத்தியாயர்கள் சியாங்கைச் சும்மா விடவில்லை, கடுமையாகச் சிட்சித்தார்கள். அதுமுதல் சியாங்கே மற்றப் பிள்ளைகளுக்குத் தலைவர். தலைவர் தம்முடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, அவசியம் நேர்ந்த பொழுது, முஷ்டியை உபயோகிக்கத் தயங்குவதில்லை. மலைகளி லிருந்து வீசும் சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு ஒடியும் சாடியும், ஆறுகளில் நீங்தியும், சியாங் பாலியத்திலேயே தக்க உடற்பயிற்சி பெற்றிருந்தார். வேறு முறையான தேகாப்பியாசம் ஒன்றும் அவர் இருந்த ஊரிலேயே இல்லை. கிராமப் பள்ளியில் படித்த பிறகு, சியாங் பெங்லு, லுங்சிங் ஹைஸ்கூல்களில் படிக்கச் சென்ருர். அங்கே படிப்பில் அவருக்கு அதிகக் கவனம் உண்டாயிற்று. அத்துடன் மற்றவர்களுடன் ஒட்டாமல் தனித்திருக்கும் வழக்கமும் அவருக்கு ஏற்பட்டது. இதைச் சிலர் அகம்பாவம் என்று கருதி ர்ைகள். உண்மை அதுவன்று. வெறும் பேச்சும் வீண் விவாதங்களும் அவருக்குப் பிடிக்காத விஷயங்கள். அப்பொழுதே அவர் யுத்த வீரராக விளங்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டதாகவும் தெரிகிறது. அந்தக் காலத்தில் சீன ஆடவர்கள் கொஞ்சம் தலை வளர்த்துப் பின்னல் போட்டுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் வற்புறுத்தி வங்தது. பின்னலே அங்கிய ராஜ வம்சத்தினராகிய மஞ்சு மன்னர்களுக்கு அடிமைப் பட்டிருப்பதற்கு அறிகுறியாகக் கருதப் பட்டது. சியாங் இளமையிலேயே பின்னலை வெட்டித் துார எறிந்துவிட்டார். இது போலவே ஸன் யாட்ளென்னும் முன்னல் செய்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பின்னலே எடுத்துவிடுவதே அங்த காளில் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டு வந்தது.