பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 115 அதுமுதல் அவர் அதிக உணவு உட்கொள்வதே இல்ல். வயிற்றை இறுகக் கட்டிக்கொண்டு படுத்துக் கொள்வதில் அவர் முன்னலேயே பயிற்சி பெற்றிருங் ததும் உதவியாயிருந்தது. அவருடன் 60-சீன வாலிபர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள். 1909-ல் அவர் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்து, 18-வது ஜப்பானிய பீரங்கிப் படையில் சேர்ந்து, தளகர்ததர் பதவிக்குரிய வேலைகளில் பயிற்சி பெற்று வங்தார். அக்காலத்தில் போர் 'வீரர்களுக்கு வேண்டிய சாகசங்களோடு, வாழ்க் கைக்கு வேண்டிய அநுபவக் கல்வியையும் அவர் பெற்று வந்தார். காலேயில் எவ்வளவு கடுமையாகப் பனி பெய்துகொண்டிருந்தாலும், அவர் பயிற்சிக் களத்திற்குப் போய்விடுவார். பூட்ஸு துடைத்தல், குதிரை தேய்த்தல் முதலிய சாதாரண வேலைகள் முதல் எல்லாவற்றையும் அவரே செய்து வந்தார். மேலதிகாரிகள் அவரிடம் ஆச்சரியமான அபூர்வத் திறமைகள் இருப்பதாக உணராவிட்டாலும், அவர் வைத்த பாரத்தையெல்லாம் தாங்குவார் என்பதையும், மிகுந்த பொறுமையுடன் தம் பணிகளைப் பிழை யில்லாமல் நிறைவேற்றுவார் என்பதையும் கண்டு கொண்டார்கள். அவரும் தம்முடைய போதகர்க வளிடம் மிக்க நன்றியறிவுடன் கடந்துவங்தார். ஜப்பானிலிருந்த சீனப் புரட்சிக்காரர்களிடம் அவருக்கு நெருங்கிய உறவு இருந்து வங்தது. கோமின்டாங் சங்கத்திற்கு முன்னல் ஏற்பட்டிருந்த டங் மெங் ஹாயி என்ற புரட்சிச் சங்கத்தில் அவர் அங்கத்தினராகச் சேர்ந்துகொண்டார். டோகியோ நகரில் அந்தச் சங்கத்தின் கூட்டம் ஒன்றில், அவர் டாக்டர் ஸன் யாட்-ஸென்னே முதல் முறையாக கேரில் தரிசித்துக்கொண்டார். புரட்சியைப் பற்றித் தலைவருடைய அமுத மொழிகளே நேரிலே கேட்டுத் தெரிந்துகொண்டார். அவருடன் பேசிப் பார்த்த