பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண விசேஷங்கள் 121 ஆல்ை, சியர்ங் மட்டும் சிரிப்பதில்லை ; சிரித்தாலும் உதடுகள் மெல்ல அசைவதோடு சரி. சியாங் வெறும் அரசியல்வாதி அல்லர். மேடைப் பிரசங்கியும் அல்லர். ஒழுக்கத்தை அடிப்படை யாகக் கொண்டது அவருடைய அரசியல் , அது சீனக் கலைப் பண்பை ஆதாரமாய்க் கொண்டது. பிரசங்கம் என்ருல், சியாங் தம் மனத்தில் தோன்றுகிற விஷயங்களை ஆடம்பர அலங்காரங்கள் இல்லாமல் அப்படியே கூறுவதுதான் வழக்கம். முக்கியமாக அவர் போர்வீரர். எல்லையற்ற தைரியமுடையவர். எத்தகைய அபாயம் நேர்ந்தாலும் அவர் துணிவைக் கைவிடுவதில்லை. மரணத்தைக் கண்டும் அவர் அஞ்சுவதில்லை என்பதைப் பல சமயங்களில் காட்டி யிருக்கிரு.ர். தாம் போர்வீரரா யிருப்பது போலவே தமக்குக் கீழுள்ள சிப்பாய்களும் தளகர்த்தர்களும் சுத்தவீரராக இருக்கவேண்டும் என்பதையும் அவர் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வருகிரு.ர். வீரர் கள் தனிப்பட்ட நபர்களுக்கோ தலைவர்களுக்கோ விசுவாசமா யிருப்பது விரும்பத்தக்கதில்லை என்றும், கொள்கைக்கும் கட்சிக்குமே விசுவாசமா யிருக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி வருகிருர், அவருடைய தேசாபிமானத்திற்கு அளவே இல்லே. துரங்கும் பொழுதிலும் சீனவைப்பற்றியே கருதுகிருர் என்று சொல்லலாம். தேசப் புனருத் தாரண விஷயமாகத் தம்மைப் பார்க்க வரும் வெளி காட்டாரிடமும், தம் கூட்டாளிகளிடமும் விஷயங் களேக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவருக்குச் சோம்பலே கிடையாதாம். வென்டல் வில்கி போயிருங்த சமயத்திலும் ஒரு வாரம் தொடர்ச்சி யாகப் பல விஷயங்களேக் கேட்டுக்கொண்டிருந்தார். அமெரிக்காவில் பெரிய தொழில்களை எப்படி நிர்வகிக் கிரு.ர்கள், மோட்டார் கார்கள் செய்வதற்கு, மிகப் பெரிய தொழிற்சாலைகளா யில்லாமல், சாதாரணத்