பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சியாங் கே-வேடிக் வருடைய உதவிபெற்று அவர் ஜியார்ஜியாவிலுள்ள ட்யூக் சர்வகலாசாலையில் சேர்ந்து கல்வி பயிலும் பேறு பெற்ருர். பின்னர் வான் டெர்பில்ட் சர்வ கலாசாலையிலும் சிறிது காலம் பயின்று, பரீட்சையில் தேறிப் பட்டமும் பெற்ருர். அக்காலத்திலேயே, 'எனக்குப் பத்து-நூறு ஜன்மங்கள் வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அத்தனே யையும் சீவுைக்கு அர்ப் பணம் செய்ய வேண்டும் 1’ என்று அவர் சொல்வது வழக்கமாக இருந்தது. சிறு வயதில் அவருடைய பெயர் ஸாவின் சியாஜா. இளமையிலேயே அவர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கொண்டார். அப்பொழுது தமக்கு உதவி செய்த கப்பல் தலைவர் சார்லஸ் ஜோன்ஸிடம் நன்றி மறவாமல் இருப்பதற்காக அவருடைய பெயரையே தாமும் சூட்டிக் கொண்டார். ஆதரிப்பார் இல்லாத அநாதைப் பிள்ளையாகச் சுற்றிவந்து, விடா முயற்சியாலும் உறுதியாலும் நவ நாகரிக நாடான அமெரிக்காவில் கல்வி கற்று ஒரு மேதையாகி, அவர் தாய்காடு திரும்பினர். ஷாங்காய் நகரில் ஒரு ஹைஸ் கூலில் உபாத்தியாயராக அமர்ந்து வெகு நாள் உழைத்து வங்தார். அங்கேதான் அவர் நி என்ற கன்னியை மணம் செய்து கொண்டார். இங்தத் தம்பதிகள் தங்களுடைய ஆறு குழங்தை களேயும் அரும் பெருஞ் செல்வங்களாகக் கருதி, கண்ணும் கருத்துமாக வளர்த்து, அமெரிக்காவில் படிக்க வைத்தார்கள். குழங்தைகளும் பெற்ருேரின் கட பிக்கைப்படியே நன் ருகப் படித்துத் தேறி வங்தார்கள். எய்லிங் தக்க வயது வங்ததும் டாக்டர் குங் என்ற செல்வரை மணந்து கொண்டார். சிங்லிங், ஸன் யாட்-லென்னுடைய காரியதரிசியாகச் சிறிது காலம் இருந்து, பிறகு இரண்டாங் தாரமாக அவரையே மணம் செய்து கொண்டார். டாக்டர் ஸ்ன் ஸ19ங் குடும்பத்திற்கு அறிமுகமானவர். அடிக்