பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சியாங் கே-வேடிக் சியாங் எதிர்காலத்தில் மகோன்னத நிலைக்கு வரப் போகிருர் என்பதை மெய்-லிங் அறிந்திருந்தார். எதிர்காலச் சீனவை மனக் கண்ணுல் பார்த்து அவர் பூரித்தார். சியாங் அவரை முதல் தடவை தனியாகச். சந்தித்தது கான்டன் நகரிலுள்ள ஒரு ஹோட்டலில். பிரபுக்களும் அதிகாரிகளும் உணவருந்தும் மண்ட பத்தில், ஒரு சமயம் அங்கே கூடியிருந்தவர் எல்லோரும் வெளியேறிய பின்னர், மெய்-லிங் தனியே இருந்தார். அப்பொழுது சியாங் அவர் அருகே போய் அமர்ந்தார். மெய்-லிங் கூச்சப்பட்டு எழுந்து போகு முன்பு, அவர் முறைப்படி மரியாதை செய்து விட்டுப் பேசத் த்ெதடங்கினர். மன்னிக்கவும். நீங்கள் டாக்டர் ஸன் யாட்-லென்னின் மைத்துணி அல்லவா ? என்று கேட்டார். மெய்-லிங் 'ஆம்' என்று ஒப்புக்கொண்டு, அவரை எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதாகவும் சொன்னர். சியாங், 'உங்களுக்கு என்னைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கக் காரணம் இல்லை. நீங்கள் அமெரிக்காவிலிருந்து இப்பொழுது தான் வங்திருக்கிறீர்கள்...என் பெயர் தளபதி சியாங் கே-வேடிக். அநேக வருஷங்களாக நான் டாக்டர் ஸ்ன்னுடன் வேலை செய்து வந்திருக்கிறேன்' என்ருர். மெய்-லிங் தம் சந்தோஷத்தைத் தெரிவித்துவிட்டு, வேறு விசேஷம் இல்லையே! நான் போய் வருகிறேன் ! என்று புறப்பட்டு விட்டார். அவரை மறுபடி எங்கே பார்க்கலாம் என்று சியாங் அவசர மாகக் கேட்டுக் கொண்டார். அமெரிக்காவில் ஆங்கிலம் கற்ற அந்த மாதரசி, என்னையா? பத்திரி கைகளில் பார்க்கலாமே!’ என்று வெடுக் கென்று பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டார். துடுக்கான இந்த வார்த்தைகளின்படியே அவர் பெயர் அன்று முதல் இன்று வரையில் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. சீனப் பத்திரிகைகள்