பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்லிங் தேவி 137 தெரிந்து வைத்துக்கொண் டிருந்தார்கள். மூவருமே பிடிவாதமான அபிப்பிராயங்கள் உடையவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும், முக்கியமாக பூரீமதி சியாங், சம்பாஷணைக்கு இன்பம் அளித்து வங்தனர்' என்று வில்கி எழுதியிருக்கிருர், அவர் போயிருந்த சமயம் எய்-லிங் நோயுற்றிருந்ததால் அவர் அந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. டாக்டர் குங் செய்து முடித்துள்ள பெரிய காரியங்கள் பல அவருடைய மனைவியாரின் ஆலோசனையின் பேரிலும், துாண்டுதலாலுமே செய்யப்பட்டனவாக ஜனங்கள் சொல்லுகிருர்கள். பொதுவாகவே, ஸஅங் சகோ தரிகள் எல்லோருமே தாங்கள் செய்யக் கருதும் அருங் காரியங்கள் எல்லாவற்றையும் தத்தம் கணவர் மூலமே செய்து முடித்துவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எய்-லிங்குக்கு அடுத்த இளைய சகோதரியான சிங்-லிங் அம்மையார் ஸன் யாட் - லென்னின் வாழ்க்கைத் துணைவியாக இருந்து தேசியப்புரட்சிக்குப் பெருங் தொண்டுகளைச் செய்திருக்கிருர், கணவரை இழந்த பிறகும் அவர் பொதுநல ஊழியத்தைக் கைவிடவில்லை. அவர் அதி தீவிரவாதி. ரஷ்யாவிடத் திலும் பொதுவுடைமையிலும் அவருக்கு மிகுந்த பற்று உண்டு. இந்த ஆத்மா ஸ்படிகம்போல் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண் டிருந்தது என்று அவரைப்பற்றி நூலாசிரியர் மெளரர் புகழ்ந்திருக் கிருர். அவர் சிறந்த அறிவாளியா யிருப்பதால், அடிக்கடி பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் தம் கருத்துக்களை காடெங்கும் பரப்பி வருகிருர். சீனவின் முதல் குடியரசுத் தலைவரான ஸன் யாட்-ஸென்னின் தர்ம பத்தினியான அந்த மாதர்குல விளக்கை நேரில் சங்திக்க முடியாமல் திரும்பிவிட்டதற்காகப் பண்டித நேரு மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருக்கிருர். கேரு சீவுைக்குப்